search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி சீர்வரிசை"

    • சேடபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்விச்சீர் வரிசையோடு ஊர்மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
    • விழா ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் சேடபாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது .இங்கு 82 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் 73 வது ஆண்டு விழா நடைபெற்றது. பெற்றோர்கள் சார்பாக பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.

    மாணவர்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள், சேர்கள், பாத்திரங்கள், காமராஜர், அப்துல் கலாம் படங்கள், சுகாதாரப் பணி பொருட்கள் உள்ளிட்டவைகளை பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா மேரி, நகர் மன்ற உறுப்பினர் ராஜசேகர் ஆகியோரிடம் பெற்றோர்கள் வழங்கினர்.

    முன்னதாக சேடபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்விச்சீர் வரிசையோடு ஊர்மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பள்ளி கலையரங்கத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பல்லடம் நகர்மன்றத் தலைவர் கவிதாமணி, தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சித்ராதேவி, செல்வகுமார், மகேஷ் குமார் மற்றும் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். 

    ×